மின்வெட்டு
அம்மா ஊட்டிய
நிலாச் சோறு...
அப்பா சொல்லித் தந்த
பாடம் கவனிக்காமல்
மண்ணெண்ய் விளக்கில்
இறந்த விட்டில் பூச்சிக்காக அழுதது...
திண்ணை இருட்டில்
கதைச் சொல்லி
தூங்க வைத்தப் பாட்டி...
தூங்குமூஞ்சி மரத்தில்
மின்மினி பூச்சிகளை
நட்சத்திரங்கள்
என பொய் சொன்னது...
மெழுகுவர்த்தி ஒளியில்
அசைந்தாடுது மனசு
இந்த மின் நிறுத்தத்தில்...
Friday, July 13, 2007
வா மழையே வா...
வா மழையே வா
மனித நேயம்
அரசியல் சட்டம்
நடுவர் மன்ற தீர்ப்புகளுக்கு
தலைவணங்காத
அரசியல்வாதிகள்
தலைகுனிய(நனைய)
வா மழையே வா ....
செடி கொடி மரங்கள்
மீண்டும்
பச்சை பசேல்
புன்முறுவலுக்கு
வா மழையே வா .....
மனித நேயம்
அரசியல் சட்டம்
நடுவர் மன்ற தீர்ப்புகளுக்கு
தலைவணங்காத
அரசியல்வாதிகள்
தலைகுனிய(நனைய)
வா மழையே வா ....
செடி கொடி மரங்கள்
மீண்டும்
பச்சை பசேல்
புன்முறுவலுக்கு
வா மழையே வா .....
நம்மால் முடியும் தம்பி....
நம்மால் முடியும் தம்பி - அட
நம்மால் முடியும் தம்பி
அப்பா போல சைக்கிள் ஓட்ட நினைச்சங்க
தப்பா கூட தீதும் ஏதும் நினைச்சதில்லைங்க
வேப்பங்கண்ணு நட்டு வைக்க நினைச்சங்க
நம்மால் முடியும் தம்பி - அட
நம்மால் முடியும் தம்பி
ஆடு மாடு கோழி எல்லாம் வளர்க்க நினைச்சங்க
பாடுப்பட்டு நல்ல மார்க்கு வாங்க நினைச்சங்க
நாடுப் போற்றும் மனிதனாக வாழ நினைகிறேங்க
நம்மால் முடியும் தம்பி - அட
நம்மால் முடியும் தம்பி
சுயநலவாதி என்று என்னை நீங்க நினைச்சிடாதிங்க
பல மனிதர்களை உருவாக்கும் செயலை செய்வோமுங்க
வாங்க பல மனிதர்களை உருவாக்கும் செயலை செய்வோமுங்க
நம்மால் முடியும் தம்பி - அட
நம்மால் முடியும் தம்பி
நம்மால் முடியும் தம்பி
அப்பா போல சைக்கிள் ஓட்ட நினைச்சங்க
தப்பா கூட தீதும் ஏதும் நினைச்சதில்லைங்க
வேப்பங்கண்ணு நட்டு வைக்க நினைச்சங்க
நம்மால் முடியும் தம்பி - அட
நம்மால் முடியும் தம்பி
ஆடு மாடு கோழி எல்லாம் வளர்க்க நினைச்சங்க
பாடுப்பட்டு நல்ல மார்க்கு வாங்க நினைச்சங்க
நாடுப் போற்றும் மனிதனாக வாழ நினைகிறேங்க
நம்மால் முடியும் தம்பி - அட
நம்மால் முடியும் தம்பி
சுயநலவாதி என்று என்னை நீங்க நினைச்சிடாதிங்க
பல மனிதர்களை உருவாக்கும் செயலை செய்வோமுங்க
வாங்க பல மனிதர்களை உருவாக்கும் செயலை செய்வோமுங்க
நம்மால் முடியும் தம்பி - அட
நம்மால் முடியும் தம்பி
Subscribe to:
Comments (Atom)